• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க கடன் முகாமைத்துவத்தினை மேம்படுத்துவதற்கான பொறுப்பு முகாமைத்துவம்
- இலங்கை அரசாங்கத்தின் கடன்மட்டம் தற்போது 9,387 பில்லியன் ரூபாவாகுமென்பதோடு, இது 2016 ஆம் ஆண்டின் அரசாங்க வருமானத்தின் சுமார் 76 சத வீதமாக உள்ளதன் விளைவாக அரசாங்க கடன்களை நிலையாக பேணுவது தொடர்பில் தேசிய ரீதியில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கடன் மீளச் செலுத்த தவறாதபோதும் இது சம்பந்தமாக உருவாகக்கூடிய எந்தவொரு ஆபத்தினையும் தவிர்ப்பதற்காக பொருத்தமான மறுசீரமைப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டியுள்ளது. இதற்கமைவாக, நேரடி அரசாங்கக் கடன் முகாமைத்துவத்திற்காக திறமுறையொன்றாக பொறுப்புக்கூறல் முகாமைத்துவத்தை பயன்படுத்துவதற்காக சட்டமூல மொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் இயைபுள்ள அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு அமைவாக பொறுப்புக் கூறல் முகாமைத்துவத்திற்குத் தேவையான ஏனைய நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.