• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 மே மாதத்தில் நிகழ்ந்த வௌ்ளப்பெருக்குடன் தொடர்புபட்ட அனர்த்த நிலைமையின் காரணமாக இன்னலுக்குட்பட்ட ஆட்களின் தொலைந்த கடவுச் சீட்டுகளை மீண்டும் வழங்குவதற்கான சலுகை
- நடைமுறையிலுள்ள சட்டநிலைமைகளின் கீழ் கடவுச்சீட்டொன்றின் செல்லுபடியாகும் காலம் முடிவடைவதற்கு முன்னர் காணாமல்போய் அல்லது சேதமடைந்திருப்பின் புதிய கடவுச்சீட்டொன்றை பெற்றுக் கொள்ளும்போது 10,000/= ரூபாவைக் கொண்ட மேலதிக கட்டணமொன்று செலுத்தப்படுதல் வேண்டும். அண்மையில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக கணிசமான அளவினரின் கடவுச்சீட்டுகள் சேதமடைந்துள்ளதாக அல்லது காணாமற்போயுள்ளதாக அறியக் கிடைக்கப் பெற்றுள்ளது.

இவ்வாறு வௌ்ளப்பெருக்கு அல்லது மண்சரிவு காரணமாக தங்களுடைய கடவுச்சீட்டு காணாமற்போன ஆளொருவர் புதிதாக கடவுச்சீட்டொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு முன்வரும் சந்தர்ப்பங்களில் உரிய பிரதேச செயலாளரின் சிபாரிசுக்கு அமைவாக விண்ணப்பதாரரினால் செலுத்தப்பட வேண்டிய மிகைக் கட்டணத்திலிருந்து விலக்களிப்பதற்கும் 2017 சனவரி 01 ஆம் திகதியன்றின் பின்னர் கடவுச்சீட்டொன்றைப் பெற்றுள்ள, ஆயினும் இதுவரை வௌிநாடு செல்லாத ஆளொருவரிடமிருந்து அதற்காக 100/= ரூபாவைக் கொண்ட சலுகைத் தொகையொன்றை அறவிட்டுக் கொண்டு கடவுச்சீட்டை வழங்குவதற்கும் இந்த சலுகையை 2017 ஆகஸ்ட் மாதம் 30 திகதிவரை நடைமுறைப்படுத்துவதற்குமாக உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.