• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு - 02, சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையிலுள்ள காணியை கலப்பு அபிவிருத்தி கருத்திட்டமொன்றுக்காக Ms.Superlative Properties Limited கம்பனிக்கு குத்தகைக்கு அளித்தல்
- நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கொழும்பு - 02, சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையிலுள்ள றூட் 03, பேர்ச்சஸ் 01 விஸ்தீரணமுடைய காணித் துண்டொன்றை கலப்பு அபிவிருத்தி கருத்திட்டமொன்றுக்காக குத்தகைக்கு அளிக்கும் பொருட்டு பொருத்தமான முதலீட்டாளர் ஒருவரை தெரிவு செய்வதற்காக திறந்த போட்டிகேள்வி கோரப்பட்டுள்ளதோடு, அதற்காக 05 கம்பனிகள் விலை முன்வைப்புகளைச் செய்துள்ளன. விலை முன்வைப்பு செய்த கேள்விதாரர்களிலிருந்து ஆகக்கூடிய விலை முன்வைப்பைச் செய்துள்ள நிறுவனமொன்றான Ms.Superlative Properties Limited கம்பனிக்கு உரிய காணித்துண்டை 1815 மில்லியன் ரூபாவுக்கு 99 வருட காலப்பகுதிக்காக குத்தகைக்களிப்பதற்கு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக, உரிய காணித்துண்டை குத்தகை அடிப்படையில் வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.