• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விசர்நாய்க்கடி நோய் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்தல்
- விசர்நாய்க்கடி நோய் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு பயன்படுத்தப்படும் Anti Rabies (TC) தடுப்பூசி (Human Use) 0.5 மி.லீ/1 மி.லீ புட்டிகள் 2,900,000 கொள்வனவு செய்வதற்காக சர்வதேச போட்டி கேள்வி கோரப்பட்டுள்ள தோடு, இதன்சார்பில் 03 விலைமுன்வைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. கொள்வனவு மேன்முறையீட்டு சபையின் சிபாரிசின் பிரகாரம் வெற்றிபெற்ற கேள்விதாரரான M/s SmithKline Beechan (Pvt) Ltd., கம்பனிக்கு இந்தக் கேள்வியை வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.