• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கமத்தொழில் பீடத்தில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கட்டடத் தொகுதியொன்றை தாபித்தல்
- யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கமத்தொழில் பீடத்தில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கட்டடத் தொகுதியொன்றை தாபிக்கும் பொருட்டு யப்பான் சருவதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடமிருந்து மானியமொன்றைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு உரிய உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதற்காக 2016 ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், உரிய கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மதியுரைக் கம்பனிகளுடன் மதியுரைச் சேவை உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டுள்ளதோடு, மானிய உடன்படிக்கை நிபந்தனைகளுக்கு அமைவாக யப்பான் சருவதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் மானிய பெறுகை வழிகாட்டல்களை பின்பற்றி மதியுரைக் கம்பனியினால் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஒப்பந்தக்காரர்களுடன் உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதற்காக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கு அதிகாரத்தினைக் கையளிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.