• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை முதலீட்டு சபையின் ஹொரண வலையத்திற்கு நீர்வழங்கல் செயற்பாட்டு நிலையமொன்றை நிருமாணித்தல்
- இலங்கை முதலீட்டு சபையினால் ஹொரண பேர்த் தோட்டத்தில் 1,463 ஏக்கரில் தாபிக்கப்பட்டுள்ள கைத்தொழிற்பேட்டையில் இயங்கும் 03 கைத்தொழில் வலயங்களில் 20 வர்த்தக செயற்பாடுகள் நடைபெறுவதோடு, இதன்மூலம் 2,500 தொழில்வாய்ப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த 03 கைத்தொழில் வலயங்களுக்கு மேலதிகமாக இலங்கை முதலீட்டு சபையினால் இந்த கைத்தொழிற் பேட்டையினுள் மேலும் பல கருத்திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொழினுட்பப்பேட்டையிலுள்ள ஹொரண ஏற்றுமதி பதனிடல் வலயத்திற்கு போதுமானளவு நீர் வழங்க வேண்டுமென்பதோடு, தொழினுட்ப காரணங்களினால் நாளொன்றுக்கு வழங்கப்படும் நீர் விநியோகத்தை 2,500 கன மீற்றர்களைவிட அதிகரிப்பதற்கு இயலாமற்போயுள்ளது. இதற்கமைவாக, இந்த தொழினுட்ப வலையத்திற்கு நாளொன்றுக்கு 8,000 கன மீற்றர் நீர் விநியோகத்தினைப் பெற்றுக் கொள்ளக்கூடிய விதத்திலான திட்டமொன்று முதலீட்டு சபையினால் திட்டமிடப்பட்டுள்ளதோடு, இந்த நீர் வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இனங்காணப்பட்டுள்ள ஹொரண, மகுருவெல பிரதேசத்திலுள்ள ஏக்கர் 02, றூட் 0, பேர்ச்சர்ஸ் 5.1 விஸ்தீரணமுடைய காணித் துண்டொன்றை இலங்கை முதலீட்டு சபைக்கு உடைமையாக்கிக் கொள்ளும் பொருட்டு திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.