• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தொழினுட்பவியல் பல்கலைக்கழகம்
- தொழினுட்ப கல்வியினை வழங்கும் நோக்கில் இலங்கை ரெலிகொம் நிறுவனத்தினால் அதன் நிதியினைப் பயன்படுத்தி தாபிக்கப்பட்டுள்ள இலங்கை தொழினுட்ப பல்கலைக்கழகத்திற்கு 2016 ஆம் ஆண்டில் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் பட்டம் வழங்கும் தர நிலையை வழங்கியுள்ளது. பாதுக்கையிலுள்ள இலங்கை ரெலிகொம் நிறுவனத்தின் செய்மதி நிலையத்தில் 36 ஏக்கர் கொண்ட நிலப் பிரதேசத்தில் இந்த பல்கலைக்கழகமானது தாபிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டிலிருந்து உயர்தரப் பரீட்சையில் தொழினுட்ப பாடத் திட்டத்தில் சித்தியடையும் மாணவர்களுக்கு நான்கு (04) வருட கால பொறியியல் பட்டபாடநெறிகளை இந்தப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தவுள்ளதெனவும் ஐக்கிய இராச்சியத்தின் லங்கஸ்ரர் பல்கலைக்கழகத்துடனும் அவுஸ்திரேலியா வின் டிக்கின் பல்கலைக்கழகத்துடனும் மாணவர்களை பறிமாறிக் கொள்ளும் உடன்படிக்கைகளை செய்து கொண்டுள்ளதெனவும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் ஜோஜியா மற்றும் டெக்ஸாஸ் தொழினுட்ப பல்கலைக்கழகங்களுடனும் நியூசிலாந்தின் லிங்கன் பல்கலைக்கழகத்துடனும் இத்தகைய நிகழ்ச்சித்திட்டங்களை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதெனவும் கைத்தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களினால் அனுசரணை வழங்கப்படும் ஆராய்ச்சிகள் நடாத்துவதனை ஊக்குவிக்கும் பொருட்டு பட்டப்பின் படிப்பு ஆராய்ச்சிப் பிரிவொன்றும் இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ளதெனவும் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.