• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மீள் ஏற்றுமதிக்காக தேயிலை இறக்குமதி செய்யும் போது அறவிடப்படும் ஒரு சதவீதமான இறக்குமதி கட்டுப்பாட்டுக் கட்டணத்தை இல்லாதொழித்தல்
- 2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிபுகளுக்கு அமைவாக மீள் ஏற்றுமதிக்காக தேயிலை இறக்குமதி செய்யும் போது வி.கா.கே (CIF) பெறுமதி மீது அறவிடப்படும் ஒரு சதவீதமான இறக்குமதி கட்டுப்பாட்டுக் கட்டணத்தை இல்லாதொழிப்பதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினாலும் திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்பைக் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு, 2016‑02‑11 ஆம் திகதியிடப்பட்டதும் 1953/28 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானியின் 1 ஆம் அட்டவணையில் 46 ஆம் தொடர் இலக்கத்திற்கான விடயத்தை நீக்கி, அதனை திருத்துவதன் மூலம் குறித்த இறக்குமதிக் கட்டுப்பாட்டுக் கட்டணத்தை இல்லாதொழிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டதோடு, மீள் ஏற்றுமதியின் பொருட்டு தேயிலை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்படும் உரிமப்பத்திரம் ஒவ்வொன்றுக்கும் 1,000/= ரூபாவைக் கொண்ட உரிமப்பத்திரக் கட்டணமொன்றை அறவிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.