• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
“திவி உதான” வட்டி மானியகடன் நிகழ்ச்சித்திட்டம் - 2017
- நாட்டின் கமத்தொழிலை விருத்தி செய்தல், உற்பத்தி பொருளாதாரத்தை ஊக்குவித்தல், சமூக நலனோம்பல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டு மானிய கடன்திட்டங்களை உருவாக்குவதற்கு 2017 வரவுசெலவுதிட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டதோடு, இதற்கமைவாக 08 மானியக் கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. “திவி உதான” வட்டி மானியகடன் நிகழ்ச்சித்திட்டம் என பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சதிட்டத்தை 2017 மார்ச் மாதம் 31 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக செயற்படுத்தப்படுமெனவும் வர்த்தக வங்கிகளினூடாக இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் தொடர்புபட்ட வங்கிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை செய்து கொள்ளப்பட்டுள்ளதெனவும் இந்த கடன்திட்டம் சம்பந்தமாக அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் மூலம் பொது மக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.