• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாஓயா ஆற்றுப்படுகையின் யட்டிமஹன நீர்த்தேக்கம் மற்றும் களனி கங்கை ஆற்றுப்படுகையின் வீஓயா நீர்த்தேக்கம் என்பவற்றை நிருமாணிப்பதற்காக சாத்தியத் தகவாய்வுகளை மேற்கொள்ளல்
- உலர் காலநிலை நிலவும் காலங்களில் மாஓயா மற்றும் களனி கங்கைகளுக்கு அண்மையில் இயங்கும் தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்குத் தேவையான நீர் பெற்றுக் கொள்வதில் சிரமங்களுக்கு முகம்கொடுக்க நேரிடுகின்றது. இந்த நிலைமை எதிர்காலத்தில் செயற்படுத்தவுள்ள நீர்வழங்கல் திட்டங்களை திட்டமிடும் போதும் தாக்கத்தைச் செலுத்தும்.

இதற்குத் தீர்வாக களனிகங்கை ஆற்றுப்படுகைக்கு அண்மையில் 19 மில்லியன் கனமீற்றர் கொள்ளளவுடைய உத்தேச வீஓயா நீர்த்தேக்கத்தை நிருமாணிப்பதற்கும் மாஓயா ஆற்றுப்படுகைக்கு அண்மையில் 12.7 மில்லியன் கனமீற்றர் கொள்ளளவுடைய உத்தேச யட்டிமஹன நீர்த்தேக்கத்தை நிருமாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உத்தேச நீரோட்டத்திற்கு எதிரான நீர்தேக்கங்களை நிருமாணிப்பது சம்பந்தமாக சாத்திய தகவாய்வுகளை மேற்கொள்வதற்கும் இதற்கான ஒப்பந்தத்தை வரையறுக்கப்பட்ட மகாவலி மதியுரை பணியகத்திற்குக் கையளிப்பதற்குமாக நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.