• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டுநாயக்க பொறியியல் தொழினுட்ப நிறுவனத்தை விருத்தி செய்யும் தரமுயர்த்தும் கருத்திட்டம்
- கட்டுநாயக்க பொறியியல் தொழினுட்ப நிறுவனத்தை விருத்தி செய்யும் கருத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தை கையளிப்பதற்கு 2017 மார்ச் 14 ஆம் திகதி அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான 9.5 மில்லியன் யூரோக்களை அந்நாட்டு வங்கியொன்றின் ஊடாக வட்டியற்ற சலுகைக் கடனாக வழங்குவதற்கு ஒஸ்ட்ரிய அரசாங்கத்தினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, உரிய கடன் தொகையைப் பெற்றுக் கொள்வதற்காக ஒஸ்ட்ரியாவின் Raiffeisen Intrernational வங்கியுடன் இணக்கப்பேச்சுகளை நடாத்துவதற்கும் அதன் பின்னர், கடன் உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதற்குமாக பதில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக நிரோஷன் பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.