• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஒஸ்ட்ரிய இலகுக் கடன் திட்டத்தின் கீழ் சத்திர சிகிச்சைக் கூடங்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளை தரமுயர்த்துதல்
- பொது மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இனங்காணப்பட்ட அரசாங்க வைத்தியசாலைகளில் உணர்விழப்பு உபகரணங்கள், தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கான செயற்கை சுவாசமூட்டல் உபகரணங்கள், குருதி வளி பகுத்தாய்வு, என்டோஸ்கொப்பி உபகரணங்கள், சத்திரசிகிச்சை மற்றும் நடமாடும் ஔியூட்டல் முறைமை ஆகிய உபகரணங்களை வழங்குவதற்கான கருத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது. இதன் சார்பில் 9.58 மில்லியன் யூரோ இலகுக் கடன் தொகையொன்றை ஒஸ்ட்ரிய வங்கியொன்றின் ஊடாக வழங்குவதற்கு ஒஸ்ட்ரிய அரசாங்கமானது உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, உரிய கடன் தொகையைப் பெற்றுக் கொள்வதற்காக உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளும் பொருட்டு பதில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக நிரோஷன் பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.