• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிதி அமைச்சின் 2016 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை
- 2013 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க அரசாங்க நிதி முகாமைத்துவ (பொறுப்புகள்) சட்டத்தின் 13 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரினால் நிதியாண்டின் இறுதியில் இறுதி வரவுசெலவுத்திட்ட நிலைமை தொடர்பிலான அறிக்கையானது (ஆண்டறிக்கை) பாராளுமன்றத்திற்கும் பொது மக்களுக்கும் வழங்க வேண்டியுள்ளது.

இதற்கமைவாக, 2016 நிதி ஆண்டிற்குரிய அரசாங்க நிதி செயற்பாடுகள் பற்றிய தகவல்களை உள்ளடக்கி 13 அத்தியாயங்களைக் கொண்டு தாயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை, அரசாங்கத்தின் நிதிக் கூற்று உட்பட இது தொடர்பிலான கணக்காய்வாளர் அதிபதியின் அறிக்கை ஆகியவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.