• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தை பலப்படுத்துதல்
- தொடச்சியாக முகம் கொடுக்க வேண்டியுள்ள இயற்கை அனர்த்தங்கள் அதேபோன்று மனித செயற்பாடுகள் காரணமாக எழும் சேதங்களுக்கு துரிதமாக செயற்படும் நிவாரண சேவைகள், மீள் நிருமாணப் பணிகள் என்பவற்றை வினைத்திறனுடன் செய்யும் பொருட்டு " தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தை" தொடர்ந்தும் பலப்படுத்துவது அத்தியாவசியமானதாகும். இதற்காக இதன் பிரதான அலுவலகம், மாவட்ட மற்றும் பிராந்திய அலுவலகங்கள் ஆகியவற்றில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல் புதிதாக பதவிகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து தேசிய, மாவட்ட மற்றும் பிராந்திய மட்டத்திலான அனர்த்த நிவாரண சேவைகள் பொறிமுறையானது பலப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இதற்கமைவாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தில் தற்போது நிலவும் உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை துரிதமாக நிரப்புவதற்கும் பிரதேச செயலகப் பிரிவுகள் ஒவ்வொன்றிற்கும் அனர்த்த நிவாரண உத்தியோகத்தர் ஒருவர் வீதம் இணைப்பதற்கும் அத்தியாவசிய பணிகளுக்காக புதிதாக பதவிகளை உருவாக்குவதற்குமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.