• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பயாகல, வடுகொட சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் அலுவலகத்தை தாபித்தல்
- களுத்துறை மாவட்டத்தில் தற்போதுள்ள சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் அலுவலகங்களின் எண்ணிக்கை உட்பட பயாகல பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தொகையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு முக்கியமாக தாய், சேய் சுகாதாரம், தொற்றாத நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் என்பன விசேட கவனத்துடன் நடைமுறைப்படுத்துவதற்காக இந்தப் பிரதேசத்தில் புதிய சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் அலுவலகமொன்றை நிருமாணிக்கும் தேவை எழுந்துள்ளது.

இதற்கமைவாக பயாகல, வடுகொட பிரதேசத்திற்கான சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் அலுவலகமொன்றை தாபிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.