• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தாதியர் பயிற்சி பாடசாலைகளின் அபிவிருத்தி
- நாடு முழுவதும் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் சுமார் 34,000 தாதிமார்கள் சேவையாற்றுகின்றனர். தாதிப்பயிற்சி பாடசாலைகளை நவீனமயப்படுத்துவது காலத்தின் தேவையாகும். இதன் கீழ் 14 தாதியர் பாடசாலைகளின் கல்வி மற்றும் நிருவாக கட்டடங்களையும் இவற்றிற்கு மேலதிகமாக சில பயிற்சி பாடசாலைகளின் விடுதிக் கட்டடங்களையும் துரிதமாக நிருமாணிக்க வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக 2017 ஆம் ஆண்டு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள 200 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினைப் பயன்படுத்தி காலி, கண்டி, அநுராதபுரம் ஆகிய தாதிப் பாடசாலைகளின் கல்வி மற்றும் நிருவாக கட்டடங்களின் நிருமாணிப்பு பணிகளை துரிதமாக ஆரம்பிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.