• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
டிஜிட்டல் அறிவு மேம்படுத்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் விருத்தி, டிஜிட்டல் பொருளாதார மேம்பாடு மற்றும் நல்லாட்சியை நோக்காக கொண்ட கருத்திட்டங்கள் : 2016 - 2018
- பொருளாதாரத்தை டிஜிட்டல் முறைப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2016 - 2018 காலப்பகுதியில் 18 கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கருத்திட்டங்களுள் 2017 ஆம் ஆண்டில் அமைச்சிற்கு குறித்தொதுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாடுகளின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள 20 மில்லியன் ரூபாவை விஞ்சும் 10 கருத்திட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளதோடு, இந்த கருத்திட்டங்களை நடப்பாண்டினுள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.