• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சர்வதேச இறப்பர் ஆய்வுக் குழுவின் 2018 ஆம் ஆண்டிற்கான வருடாந்த கூட்டத்தை இலங்கையில் நடாத்துதல்
- இறப்பர் உற்பத்தி மற்றும் பாவனைசார்ந்த உரிய தரப்பினர்களைக் கொண்ட அரசாங்கங்களுக் கிடையிலான அமைப்பொன்றாக 1944 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச இறப்பர் ஆய்வுக்குழுவானது தற்போது இலங்கை உட்பட 36 உறுப்பு நாடுகளையும் 120 கைத்தொழில் உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. இந்த சர்வதேச அரசாங்க அமைப்பின் அடுத்த வருடாந்த கூட்டம் 2018 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்துவதற்கான வசதிகளைச் செய்யும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.