• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நுவரெலியா மாவட்டத்தினுள் சேரும் குப்பைகூளங்களை அகற்றுதல்
- நுவரெலியா நகரம் உட்பட அதற்கண்மித்த பிரதேசங்களில் சேரும் குப்பைகூளங்கள் நுவரெலியா மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இடப்படுவதோடு, அதற்காக முறையான வழிமுறையொன்று பின்பற்றப்படாமை பல்வேறுபட்ட சுகாதார பிரச்சினைகள் உருவாவதற்கும் அதேபோன்று நுவரெலியா பிரதேசத்தில் அதன் சுற்றாடல் சார்ந்த வனப்புக்கு பிரதிகூலமான தாக்கத்தினை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.

இந்த நிலைமையைத் தவிர்ப்பதற்கு முறையான கழிவு முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் தேவையானது கண்டறியப்பட்டுள்ளதோடு, இதற்குத் தேவையான காணித்துண்டுகளை வழங்குவதற்கு இரண்டு (02) பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் உடன்பாடு தெரிவித்துள்ளன. இதற்கமைவாக, இந்தக் காணித்துண்டுகளில் கழிவு முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டங்கள் இரண்டினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.