• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெலிபடன்வில கடற்றொழில் துறைமுக பிரதேசத்திலுள்ள நிலப்பிரதேசத்தில் ஒரு பகுதியில் படகு தொழிற்சாலையொன்றை நிருமாணிப்பதற்காக குத்தகைக்களித்தல்
- சுற்றுலாத்துறைக்குத் தேவையான பயணிகளைக் கொண்டு செல்லும் படகுகள், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் படகுகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றை நிருமாணிக்கும் பொருட்டு தற்போது கொக்கல கைத்தொழிற்பேட்டையில் அதன் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள இலங்கை முதலீட்டு சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள Building a Future Foundation (BAFF) கம்பனிக்கு பேருவெல கடற்றொழில் துறைமுக பிரதேசத்திலிருந்து ஏக்கர் 01, பேர்ச்சர்ஸ் 6.4 விஸ்தீரணமுடைய காணித்துண்டொன்றை வழங்குவதற்கு இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனம் 2014 ஆம் ஆண்டில் உடன்படிக்கையொன்றை செய்து கொண்டுள்ள போதிலும் உரிய கடற்றொழிலாளர்களின் உடன்பாட்டினைப் பெற்றுக் கொள்வதற்கு இயலாமற் போனமையினால் இதுவரை குறித்த காணித்துண்டை இந்தக் கம்பனிக்கு வழங்க முடியாமற் போயுள்ளது.

ஆதலால், அம்பலந்தொட்ட பிரதேச செயலகப் பிரிவில் வெலிபடன்வில இறங்குதுறைக்கு அண்மையில் அமைந்துள்ள உஸ்சன்கொட, முத்தலகஹலந்த என்னும் காணியிலிருந்து 01 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணியை இந்த தொழிற்சாலையினை நிருமாணிப்பதற்குப் பொருத்தமான மாற்று இடமொன்றாக இனங்காணப்பட்டுள்ளதோடு, இந்த காணித்துண்டை அரசாங்க மதிப்பீட்டின் மீது குத்தகை அடிப்படையில் உரிய கம்பனிக்கு வழங்கும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.