• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முத்துராஜவெலயிலுள்ள ஏக்கர் 2, றூட் 0, பேர்ச்சர்ஸ் 11 விஸ்தீரணமுடைய காணியை Dart Global Logistics (Pvt) Ltd நிறுவனத்திற்கு குத்தகைக்கு அளித்தல்
- இலங்கை காணி நிலமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினால் வத்தளை முத்துராஜவெல பிரதேசத்தில் சுமார் 400 ஏக்கர் நிலப் பிரதேசத்தை கடல்மண் கொண்டு அபிவிருத்தி செய்து பல்வேறுபட்ட முதலீட்டுக் கருத்திட்டங்களுக்கும் அரசாங்க கருத்திட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 03 காணித்துண்டுகள் வழங்கல் கருத்திட்டங்களுக்காக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதோடு, மேலும் இரண்டு (02) காணித்துண்டுகளை இதற்குச் சமமான கருத்திட்டங்களுக்காக வழங்குவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கமைவாக, அக்கறை கொண்டுள்ள தரப்பினர்களிடமிருந்து 30 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, ஏக்கர் 2, றூட் 0, பேர்ச்சர்ஸ் 11 விஸ்தீரணமுடைய காணித்துண்டு சார்பில் ஆகக்கூடிய விலைகளை முன்வைத்துள்ள Dart Global Logistics (Pvt) Ltd கம்பனிக்கு இந்த காணித்துண்டை 30 வருட காலப்பகுதிக்கு உரிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு, குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.