• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மெய்யாதனம் மற்றும் விலைமதிப்பு நிறுவகத்தை தாபித்தல்
- ஆதனங்களை முகாமித்தல், விற்பனை செய்தல், அபிவிருத்தி செய்தல், முதலீடு செய்தல், விலை மதிப்பிடுதல் போன்ற துறைகளின்பால் கவனம் செலுத்தி ஆதன தொழிலுக்குரியதாக தொழில்சார் மேம்பாட்டினை உருவாக்கும் நோக்கில் ஆதனங்கள் மற்றும் விலைமதிப்பு நிறுவனமானது 2001 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டுள்ளதோடு, இது கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் நோக்கங்களை மேலும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் பாராளுமன்றத்தினால் ஆக்கப்பட்ட சட்டத்தின் கீழ் நிறுவனமாக தாபிப்பதற்கு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.