• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சுற்றாடல் ஆரோக்கிய ஆயுள்வேத கிராமமொன்றையும் ஆராய்ச்சி நிலையமொன்றையும் தாபித்தல்
- உள்நாட்டு மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி சருவதேச மற்றும் தேசிய தரம் வாய்ந்த சிகிச்சைக் கிராமமொன்றை தாபிப்பதற்கும் உள்நாட்டு மருத்துவ முறை தொடர்பில் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலையமொன்றை தாபிப்பதற்குமான எண்ணக்கருவினைக் கொண்டு இலங்கை சுற்றாடல் ஆரோக்கிய ஆயுள்வேத கிராமமொன்றையும் ஆராய்ச்சி நிலையமொன்றை நிருமாணிப்பது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ள களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேச செயலகப் பிரிவின் மெத்தேவத்த பிரதேசத்தில் தாபிப்பதற்காக அரச தனியார் பங்களிப்பின் கீழ் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.