• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட சமூகம்சார் அமைப்புகளை வலுவூட்டுவதற்கும் ஒழுங்குறுத்துவதற்குமான பொறி முறையை முறைப்படுத்துதல்
- இலங்கையில் பொதுமக்களில் சுமார் 90 சதவீதமானோருக்கு சுத்தமான குடிநீர் பெற்றுக் கொள்வதற்கு வசதியுள்ளதோடு, இதில் 46 சதவீதமானோர் அவர்களுடைய குடிநீர் தேவைகளை குழாய்நீர் விநியோகம் மூலம் பூர்த்தி செய்கின்றனர். தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் 35 சதவீதமான குழாய்நீர் வழங்கப்படுவதோடு, மீதி 11 சதவீதம் சமூகம்சார் நீர் கருத்திட்டங்களின் ஊடாக வழங்கப்படுகின்றது. பொது மக்களினால் நடைமுறைப்படுத்தப்படும் நீர் விநியோக கருத்திட்டங்கள் சம்பந்தமாக எழும் பிரச்சினைகளை ஒழுங்குறுத்துவதற்கும் தீர்த்து வைப்பதற்கும் அரசாங்கம் தலையிடும் தேவையினைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களம் 2014 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டது. இதற்கமைவாக கிராமிய மக்களுக்கு நீர் வழங்கும் சமூகம்சார் நீர்வழங்கல் அமைப்புகள் இந்த திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்படுவதற்கும் இந்த சமூகம்சார் அமைப்புகளை ஒழுங்குறுத்துவதற்கு பிராந்திய, மாவட்ட மற்றும் தேசிய மட்டத்தில் "சமூகம்சார் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் சங்கங்களை" தாபிப்பதற்கும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டதோடு, இது சம்பந்தமாக சமூகம்சார் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்குமான விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டமொன்று 2017 யூன் மாதம் 20 ஆம் திகதியிலிருந்து 23 ஆம் திகதிவரை நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களும்கூட கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.