• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்காக Hydrofluorocarbon (HFC) பாவனையை மட்டுபடுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுத்தல்
- சூரியனிலிருந்து வௌிவரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கதிர்கள் பூமியில் படுவதை தடுத்து பூமியில் வாழும் சகல உயிர்களினதும் தாவரங்களினதும் பாதுகாப்பினை ஓசோன் படலமானது உறுதிப்படுத்துகின்றது. இந்தப் படலத்திற்கு சேதம் விளைவிக்கும் இரசாயன பாவனையை ஒழுங்குறுத்தி அவற்றை முறையாகவும் கட்டம்கட்டமாகவும் பாவனையிலிருந்து நீக்கும் கடும் தேவையை கண்டறிந்த உலக சமூகமானது 1985 ஆம் ஆண்டில் ஓசோனைப் பலவீனப்படுத்தும் பொருட்களின் பாவனையை இல்லாதொழித்தல் தொடர்பிலான வியன்னா இணக்கப்பாட்டினையும் அதன்பின்னர் 1987 ஆம் ஆண்டில் மொன்றியல் உடன்படிக்கையையும் செய்து கொண்டது. மொன்றியல் உடன்படிக்கைக்குச் செய்யப்பட்ட இறுதி திருத்தமானது 2016 ஒக்றோபர் மாதம் 15 ஆம் திகதியன்று ருவண்டா, கிகாளியில் மேற்கொள்ளப்பட்டதோடு, அங்கு Hydrofluorocarbon (HFC) பாவனையை கட்டம் கட்டமாக மட்டுப்படுத்தும் பொருட்டு சகல தரப்பினர்களினாலும் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இலங்கை இந்த திருத்தத்திற்கு செயல்வலுவாக்கம் அளிக்கும் பொருட்டு துரிதமாக திட்டமிடுவதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கும் அதன் பின்னர் இலங்கையினால் இந்த திருத்தத்திற்கு செயல்வலுவாக்கம் அளிக்கும் பொருட்டும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.