• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குருநாகல் பாதுகாப்பு சேவைகள் "விரு தரு விதுபியச" சார்பில் பொது வசதிகளுடன் கூடிய மூன்று மாடி கட்டடமொன்றை நிருமாணித்தல்
- கல்வி அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்ட 215 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டின் கீழ் இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் குருநாகல் பாதுகாப்பு சேவைகள் "விரு தரு விதுபியச" சார்பில் மூன்று மாடி கட்டடமொன்றை நிருமாணித்து கடந்த மார்ச் மாதம் மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. ஆயினும், இந்தக் கட்டடத்தினுள் கல்வி நடவடிக்கைகளுக்கும் வௌிவாரி நடவடிக்கைகளுக்கும் தேவையான ஆய்வுகூடம், நூலகம், கேட்போர்கூடம், கணனி கூடம் அடங்கலாக ஏனைய அத்தியாவசிய வசதிகள் இல்லாமையினால் இந்தக் குறைபாடுகளை தீர்த்துக் கொள்வதற்காக "விதுபியசவில்" பொது வசதிகளுடன் கூடிய மூன்று மாடி கட்டடமொன்றை நிருமாணிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.