• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடந்த நாட்களில் நிலவிய அவசர அனர்த்த நிலைமை காரணமாக சில பிரதேசங்களில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுதல்
- கடந்த 2017‑05‑25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நாட்டின் சில பிரதேசங்களுக்கு பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வௌ்ளம் காரணமாக உயிரிழப்புகளும் அதேபோன்று பெரும்பாலான சொத்துக்களும் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கழிவுகளும் குப்பைகளும் பெருமளவில் திரண்டுள்ளதோடு, இந்த கழிவுகளை துரிதமாக அப்புறப்படுத்தும் தேவை சுகாதாரத் துறையினால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு பெரிய அளவில் திரண்டுள்ள குப்பைகளை அகற்றுவதற்கு தற்போது உள்ளூராட்சி நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் போதுமானதாக இல்லாமையினால், இந்த நோக்கத்திற்குத் தேவையான வாகனங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 100 மில்லியன் ரூபாவைக் கொண்ட மேலதிக நிதி ஏற்பாட்டினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினாலும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.