• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் இனங்காணப்படாத நாட்பட்ட சிறுநீரக நோய் தொடர்பான கற்கை மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பொருட்டு இலங்கையில் நாட்பட்ட சிறுநீரக நோய்த் தடுப்பிற்கான சனாதிபதி செயலணிக்கும் அவுஸ்திரேலியாவின் அணுவிஞ்ஞான மற்றும் தொழினுட்ப அமைப்பிற்கும் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை
- திட்டவட்டமான காரணங்கள் இனங்காணப்படாத சிறுநீரக நோய் தற்போது இலங்கையில் 11 மாவட்டங்களிலுள்ள 60 பிரதேச செயலகப் பிரிவுகளில் பரவியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் தொடர்பில் ஆராய்வதற்கும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்குமாக அவுஸ்திரேலியாவின் சிறுநீரக நோய் நிபுணர்களின் ஒத்துழைப்பையும் அந்நாட்டின் அணுவிஞ்ஞான மற்றும் தொழினுட்ப அமைப்பின் விஞ்ஞான ரீதியிலான உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் இலங்கையில் நாட்பட்ட சிறுநீரக நோய்த் தடுப்பிற்கான சனாதிபதி செயலணிக்கும் அவுஸ்ரேலியாவின் அணுவிஞ்ஞான மற்றும் தொழினுட்ப அமைப்பிற்கும் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கடந்த மே மாதம் 24 ஆம் திகதியிலிருந்து 26 ஆம் திகதிவரை அதிமேதகைய சனாதிபதி அவர்கள் அவுஸ்ரேலியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர் விஜயத்தின்போது கைச்சாத்திடப்பட்டுள்ளமை அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.