• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுகததாச தேசிய விளையாட்டுத் தொகுதியை விருத்தி செய்தல்
- சுகததாச தேசிய விளையாட்டுத் தொகுதியின் மூலம் தேசிய மற்றும் சருவதேச மட்டத்திலான விளையாட்டுப் போட்டிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை செய்யப்படுகின்றன. இது சுகததாச தேசிய விளையாட்டுத் தொகுதி அதிகாரசபையின் மூலம் நிருவகிக்கப்படுவதோடு, சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் நிருமாணிக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டுத் தொகுதியை நவீனமயப்படுத்துவதற்கு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த விளையாட்டுத் தொகுதியை மிக சிறந்த நிலைக்கு கொண்டு வருவதற்குத் தேவையான பின்வரும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* சூரிய சக்தி மின் உற்பத்தி முறைமையொன்றைப் பொருத்துதல்.

* திறந்தவௌி அரங்கிற்கு மின்சாரம் வழங்கும் தூண்களில் மின்சாரம் செல்லும் வயர்கள் உட்பட ஏனையவற்றைத் திருத்துதல்.

* பிரதான விளையாட்டு அரங்கினுள் மின் ஔி முறைமையையும் ஒலிபெருக்கி முறைமையையும் நவீனமயப்படுத்தல்.