• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மக்கள் வங்கியின் மூலதனத் தொகையை 5.0 பில்லியன் ரூபாவினால் வலுவூட்டிக் கொள்தல்
- மக்கள் வங்கி ஆரம்பிக்கப்பட்டு சுமார் 55 வருடங்கள் கடந்துள்ளதோடு, இதுவரை வங்கிக்குச் சொந்தமான திரட்டிய மொத்த சொத்துக்களின் அளவானது 1.4 ரிலியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. இது ஆசியாவிலுள்ள வங்கிகளுக்கிடையில் 387 ஆவது இடத்தைப் பெற்றுள்ளதோடு, உள்நாட்டு தரப்படுத்தலுக்கு அமைவாக நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியுமாகும். ஏற்கனவே வங்கிக்குச் சொந்தமான 737 சேவை நிலையங்கள் உள்ளதோடு, மொத்த கணக்குகளின் எண்ணிக்கை அண்ணளவாக 18 மில்லியன் ஆகும். வங்கித்துறையிலுள்ள ஒழுங்குவிதிகள், மேற்பார்வை மற்றும் அவதானம் என்பவற்றை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் வங்கி மேற்பார்வை பற்றிய "Basel" குழுவினால் வங்கிகளின் மூலதன ஒழுங்குறுத்துகை தொடர்பில் அறிமுகப்புத்தியுள்ள "Basel III” தரங்களுக்கு அமைவாக மக்கள் வங்கியின் மூலதனத்தை மேலும் 05 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கும் பொருட்டு அரசாங்க தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.