• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிழக்கு மாகாணத்தில் விசேட பொருளாதார மத்திய நிலையமொன்றை நிருமாணித்தலும் மதியுரைச் சேவையை பெற்றுக் கொள்தலும்
- கிழக்கு மாகாணத்தில் விசேட பொருளாதார மத்திய நிலையமொன்றை நிருமாணிப்பதற்காக 2017 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் 300 மில்லியன் ரூபா நிதி ஏற்பாடானது ஒதுக்கப்பட்டுள்ளதோடு, இதற்கு பொருத்தமான இடமொன்றாக களவாஞ்சிக்குடி - மண்முனை தெற்கு பிரதேச செயலகப் பிரிவில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணித் துண்டொன்று உரிய உத்தியோகத்தர்களினதும் அரசியல் அதிகாரபீடங்களினதும் உடன்பாட்டுடன் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைவாக கண்டறியப்பட்டுள்ள ஏக்கர் 02 றூட் 03 விஸ்தீரணமுடைய காணித் துண்டை கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கு உடைமையாக்கிக் கொள்வதற்கும் வடிவமைத்து நிருமாணிக்கும் அடிப்படையில் உரிய பொருளாதார மத்திய நிலையத்தை நிருமாணிக்கும் ஒப்பந்தத்தை பத்து பொருளாதார மத்திய நிலையங்களை நிருமாணித்ததன் மூலம் சிறந்த அனுபவம் பெற்றுள்ள மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு கையளிப்பதற்கு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.