• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மேம்படுத்தப்பட்ட மரக்கறி விதைகளின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இலங்கை கமத்தொழில் திணைக்களமும் பங்களாதேஷ் Lal Teer Seed Ltd கம்பனியும் கூட்டு கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- கமத்தொழில் திணைக்களமும் தனியார்துறை நிறுவனங்கள் சிலவும் மரக்கறி விதை உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற போதிலும் நாட்டின் காலநிலைக்கு ஏற்ற மேம்படுத்தப்பட்ட மரக்கறி விதை தேவைகளை முழுமையாக வழங்குவதற்கு இந்த நிறுவனங்களுக்கு இயலாமற்போயுள்ள மையினால், விதை பெறுமளவில் இறக்குமதி செய்வதன் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வொன்றாக உயர் தரத்திலான விதைகளை உற்பத்தி செய்யும் அதற்கான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆற்றல் கொண்ட பங்களாதேஷில் தாபிக்கப்பட்டுள்ள Lal Teer Seed Ltd கம்பனியுடன் கூட்டு கருத்திட்டமொன்றை மகாஇலுப்பள்ளம வௌிக்கள பயிர் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவன மனையிடத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்திற்குத் தேவையான நிதி இந்தக் கம்பனியினால் வழங்கப்படுவதோடு, கமத்தொழில் திணைக்களத்தினால் தேவையான காணி வழங்கவேண்டியுள்ளது. கருத்திட்டத்திற்கு இரு தரப்பினர்களிடமும் உள்ள தொழினுட்ப அறிவு மற்றும் மரபணு வளங்கள் பயன்படுத்தப்படும். இதற்கமைவாக உரிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும் உத்தேச கூட்டு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் கமத்தொழில் பணிப்பாளர் அதிபதிக்கு உரிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு அதிகாரமளிப்பதற்குமாக கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.