• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாடசாலை சிறுவர்கள் மத்தியில் உடற்பருமனை தடுத்தல்
- நடைமுறையில் இலங்கை முகங்கொடுக்கும் முக்கிய சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளது மாரடைப்பு, இரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய் போன்ற தொற்றாத நோய்களென கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் நிகழும் மரணங்களிலிருந்து 59 சதவீதம் தொற்றாத நோய்களினால் நிகழ்வதோடு, இதற்கு ஆளாகுபவர்களில் பெரும்பாலானோர் 60 வயதிற்கு குறைந்தவர்களெனவும் தெரியவந்துள்ளது. போதுமான அளவு உடற்பயிற்சிகளில் ஈடுபடாமை காரணமாக இளைஞர்களுக்கிடையில் உடற்பருமன் அதிகரித்து வரும் போக்கு காணக்கிடைக்கின்றமையினால், பாடசாலை காலத்தில் உடற்பயிற்சிகளில் மாணவர்களை அதிகளவு ஈடுபடுத்துவதற்கும் பாடசாலை மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வகைகளைப் பழக்கப்படுத்துவதற்கு கூடிய வாய்ப்பு உரியதாகும் விதத்தில் புதிய நிகழ்ச்சித்திட்டமொன்றை கல்வி அமைச்சின் சிபாரிசுடன் நடைமுறைப்படுத்துவதற்குமாக காதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.