• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-06-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
துப்புரவேற்பாடு மீதான தேசிய கொள்கை
- "துப்புரவேற்பாடு மீதான தேசிய கொள்கை" இதற்கு முன்னர் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டதோடு, அதனை மிக பயனுள்ள வகையில் நடைமுறைப் படுத்துவதன் பொருட்டு இது தொடர்பில் அக்கறையுள்ள தரப்பினர்கள், துறைசார்ந்த நிபுணர்கள் அதேபோன்று நிதி, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி, கல்வி ஆகிய அமைச்சர்களினால் இது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அவதானிப்புரைகளையும் இதனை மேம்படுத்தும் பொருட்டு நியமிக்கப்பட்ட தேசிய வழிநடத்தல் குழுவின் சிபாரிசுகளையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, மீளத் தயாரிக்கப்பட்டுள்ளது. நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த தேசியக் கொள்கைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.