• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வௌ்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
- வௌ்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மரணித்த குடும்பங்களின் உறுப்பினர்கள் சார்பிலும் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலும் அமைச்சரவையானது அதன் ஆழ்ந்த அனுதாபத்தையும் இந்த கடினமான சந்தர்ப்பத்தில் முனைப்புடன் செயற்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசாங்க உத்தியோகத்தர்கள், முப்படையினர், பொலிஸ் உட்பட சிவில் பாதுகாப்பு படையணி அடங்கலாக சகல பிரிவுகளுக்கும் அரசாங்கத்தின் நன்றியையும் தெரிவித்ததுடன், இது தொடர்பில் பின்வரும் தீர்மானங்களை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது:

(i) வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சமைத்த உணவினை வழங்குவதற்காக ஆள் ஒருவருக்கு நாளொன்றுக்காக ஒதுக்கப்படும் 225/= ரூபா கொண்ட ஆகக்கூடிய தொகையை இந்த அனர்த்த நிலைமை சார்பில் 300/= ரூபா வரை அதிகரிப்பதற்கும்.

(ii) இந்த வருட காலப்பகுதியில் அமைச்சர்களினதும் அமைச்சுக்களினதும் பாவனைக்காக புதிய வாகனங்களை கொள்வனவு செய்வதை உடனடியாக இடைநிறுத்துவதற்கும்.

(iii) இந்த அனர்த்தம் காரணமாக சேதமுற்ற வீடுகளையும் ஏனைய கட்டடங்களையும் இலங்கை தரைப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படையணி என்பனவற்றின் ஊடாக புனரமைப்பதற்கு வழிமுறை யொன்றை வகுத்தமைப்பதற்கும்.

(iv) உதவும் பொருட்டு வௌிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் நிதி உதவிகளை இந்த அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகளை நிருமாணிப்பதற்காக பயன்படுத்துவதற்கும்.

(v) 2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் அபிவிருத்திக் கருத்திட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்ச்சித் திட்டங்களுக்காக குறித்தொதுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாடுகளை மீள் முன்னுரிமையளிப்பதன் மூலம் உத்தேச மீள் அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை ஏற்பாடு செய்து கொள்வதற்கும் அனர்த்தத்தினால் சேதமடைந்த கட்டடங்களையும் ஏனைய மூலதன சொத்துக்களையும் புனரமைக்கும் பொருட்டு பொருத்தமான வழிமுறையொன்றை சிபாரிசு செய்வதற்காகவும் பின்வரும் அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கும்.

* மாண்புமிகு மங்கள சமரவீர அவர்கள்,
நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் - (தலைவர்);

* மாண்புமிகு ரவி கருணாநாயக்க அவர்கள்,
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்; அத்துடன்

* மாண்புமிகு கபீர் ஹஷிம் அவர்கள்,
அரசாங்க தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்.

(vi) இந்த அனர்த்தத்தினால் சேதமுற்ற வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைப்பதற்கு பங்களிப்பு நல்கும் தனியார்துறைக்குக் கிடைக்கக்கூடிய வரிச்சலுகை பற்றி தனியார்துறையினருக்கு அறியச் செய்யுமாறு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்கும்.