• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய இயற்கை அனர்த்த மற்றும் அவசர நிவாரண காப்புறுதித் திட்டத்திற்கான மீள் காப்புறுதி - 2017/2018
- 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுக்கு அமைவாக நாட்டில் ஏற்படும் புயல், வௌ்ளம், மண்சரிவு, சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களிலிருந்து முழு நாடும் தழுவப்படும் விதத்தில் தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் கீழ் காப்புறுதித் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காப்புறுதித் திட்டத்தின் கீழ் தற்போது பெற்றுக் கொள்ளக்கூடிய நலன்களை மேலும் அதிகரித்து மிக வெற்றிகரமான காப்புறுதித் திட்டமொன்றாக மேம்படுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் 500 மில்லியன் ரூபா குறித்தொதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, மின்னல் தாக்கத்தினால் நிகழும் உயிரிழப்புகள், பல்வேறுபட்ட பொருட்கள் ஆட்கள் மீது விழுவதன் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள், கடும் காற்றினால் மரங்கள் முறிந்து விழுவதனால் ஏற்படும் சேதங்கள், கடும் மழை காரணமாக மதில்கள் உடைந்து விழுவதனால் ஏற்படும் சேதங்கள் மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக மனிதர்கள் முகம் கொடுக்கும் பூரண இயலாமை போன்றவற்றுக்காக நட்டஈடு செலுத்துவதை உள்வாங்கி நலன்கள் வழங்கப்படுதலானது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த காப்புறுதித் திட்டத்தின் கீழ் தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தினால் 15 பில்லியன் ரூபா கொண்ட காப்புறுதி காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதோடு, இந்த நிதியத்திற்கு ஏற்படக்கூடிய வழமைக்குமாறான நட்டத்தினைத் தவிர்க்கும் நோக்கில் மீள் காப்புறுதி செய்யப்பட வேண்டியுள்ளது. இதற்காக, தொழினுட்ப மதிப்பீட்டுக் குழுவினாலும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினாலும் சிபாரிசு செய்யப்பட்டுள்ள வாறு மீள் காப்புறுதிக் கம்பனியொன்றைத் தெரிவுசெய்வதற்கும் அதற்கான தவணைத் தொகையைச் செலுத்துவதற்கும் உரிய உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.