• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2018 - ஆசிய சமுத்திர வலய நாடுகளில் தாபிக்கப்பட்டுள்ள விளையாட்டுத் துறையில் ஊக்கமருந்து தடுப்பு தொடர்பான மாநாட்டிற்கு அனுசரணை வழங்குதல்
- 2018 ஆம் ஆண்டில் நடாத்தப்படவுள்ள ஆசிய சமுத்திர வலய நாடுகளில் தாபிக்கப்பட்டுள்ள விளையாட்டுத்துறையில் ஊக்கமருந்து தடுப்பு தொடர்பான தாபனங்களின் மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு உலக விளையாட்டுத்துறையில் ஊக்கமருந்து தடுப்பு தொடர்பான நிறுவனத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் உலக விளையாட்டுத்துறையில் ஊக்கமருந்து தடுப்பு தொடர்பான நிறுவனத்தின் உறுப்பினர்கள் தேசிய ஒலிம்பிக் குழு உறுப்பினர்கள் உட்பட இலங்கை அறிஞர்கள் அடங்கலாக 150 பேர்கள் கலந்து கொள்ளவுள்ளதோடு, அவர்களுக்கு அனுசரணை வழங்கவேண்டியுள்ளது. இதற்கமைவாக, இந்த மாநாட்டை 2018 ஆம் ஆண்டில் இலங்கையின் அனுசரணையில் நடாத்துவதற்கும் அதற்காக 20 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பிடப்பட்ட செலவினை ஏற்பதற்கும் தேவையான நிதி ஏற்பாடுகளை 2018 ஆம் ஆண்டிலே பெற்றுக் கொள்வதற்குமாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.