• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டையில் பாதசாரிகளுக்கான காலடிப்பாதை வலையமைப்பின் அபிவிருத்தி (கட்டம் III இன் நிருமாணிப்பு)
- கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை பிரதேசங்களில் நிலவும் கடும் வாகன நெரிசலைக் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு, பாதசாரிகளுக்கு பாதுகாப்பாக பயணிப்பதற்கு இயலுமாகும் வகையில் முக்கிய இடங்களை இணைத்து காலடிப்பாதை வலையமைப்பை நிருமாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தின் I ஆம் கட்டமாக டீ.ஆர்.விஜேவர்தன மாவத்தையிலிருந்து ஓல்கொட் மாவத்தை வரையிலான பகுதியின் வேலைகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, II ஆம் கட்டத்தின் கீழ் ஓல்கொட் மாவத்தையிலிருந்து கடற்கரை வீதிக்கு இடைப்பட்ட பகுதிக்கான வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த கருத்திட்டத்தின் கட்டம் III ஆக புனித செபஸ்ரியன் கால்வாய் தொழினுட்பக் கல்லூரி சந்தியிலிருந்து மீயுயர் நீதிமன்ற கட்டடத்தொகுதி வரையிலான பாதசாரிகளுக்கான கடவையை அபிவிருத்தி செய்வதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளதோடு, அது 6 மீற்றர் (20 அடி) அகலம் கொண்டதாவதோடு, நீளம் 1,485 மீற்றர் ஆகும். இந்த III ஆம் கட்டத்தின் கீழ் உத்தேச நிருமாணிப்பானது மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு குறித்தொதுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாடுகளை பயன்படுத்தி இலங்கை கடற்படையினரைக் கொண்டு செய்வித்துக் கொள்வதற்காக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.