• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குப்பைகள் இடப்படும் இடங்களில் காட்டு யானைகள் உலாவுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்
- முறைகேடாக குப்பைகள் இடப்படுவது சுற்றாடலையும் அதேபோன்று வன சீவராசிகளையும் பிரதிகூலமான விதத்தில் பாதித்துள்ளது. முக்கியமாக வனசீவராசிகள் உள்ள பிரதேசங்களில் குப்பைகள் இடும் சுமார் 54 இடங்கள் உள்ளதென கண்டறியப்பட்டுள்ளதோடு, 300 காட்டு யானைகளுக்கு மேலாக இந்த சூழலில் நடமாடித் திரிகின்றனவெனவும் அறிக்கையிடப்பட்டுள்ளது. இந்த காட்டு யானைகள் குப்பைகளை உணவாக உட்கொள்வதற்கு பழகியுள்ளதன் காரணமாக இந்த விலங்குகளின் உயிருக்கு கடும் அச்சுறுத்தல் நிலவுகின்றது. இதற்கமைவாக இந்த நிலைமைக்குத் தீர்வொன்றாக வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சும் இணைந்து வனசீவராசிகள் பரவலாக நடமாடும் பிரதேசங்களுக்கு முன்னுரிமையளித்து குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் வேலைத்திட்ட மொன்றை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவற்கும் திறந்த நிலையில் குப்பைகள் இடப்படும் இடங்களுக்கு யானைகள் உட்செல்ல முடியாதவாறு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சினால் உரிய இடங்களில் மின்சார வேலிகளை நிருமாணிப்பதற்குமாக வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினாலும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.