• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வௌ்ளவத்தை பிரதேசத்திலுள்ள கட்டடமொன்று இடிந்து விழுந்ததன் காரணமாக நிகழ்ந்த விபத்து
- வௌ்ளவத்தை பிரதேசத்தில் நிருமாணிக்கப்பட்டு வந்த கட்டமொன்று இடிந்து விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட விபத்து தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதோடு, இத்தகைய நிகழ்வுகள் எதிர்காலத்தில் ஏற்படாதென்பதை உறுதிசெய்வதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் தேவை அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

உரிய கட்டடத்தை நிருமாணிப்பதற்கு சட்ட தேவைகளின் பிரகாரம் எவ்வித அனுமதியும் பெற்றுக் கொண்டிருக்கவில்லையெனவும் சட்டவிரோதமாக இந்தக் கட்டடத்தை நிருமாணிப்பதற்கு இடமளித்தமை சம்பந்தமாக பொறுப்புக் கூறவேண்டிய உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எதிராக முறையான ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதெனவும் இந்த விசாரணைகளின் முடிவுகளின் மீது பொறுப்புக் கூறவேண்டிய உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் ஏற்படாமல் இருப்பதனை உறுதிசெய்யுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதெனவும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் இது சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.