• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நுவரெலியா உயர் விளையாட்டுக் கட்டடத் தொகுதியொன்றை நிருமாணிப்பதற்கு நிதி உதவியைப் பெற்றுக் கொள்ளல்
- வலைய மற்றும் சர்வதேச மட்டத்தில் இலங்கை விளையாட்டு வீரர்களின் போட்டித் தன்மையை விரிவுபடுத்தும் அத்துடன் நிருமாணிக்கப்படவுள்ள கட்டடத்தொகுதியை மனங்கவரும் இடமொன்றில் அமைப்பதன் காரணமாக கணிசமான அளவு வௌிநாட்டு நாணயங்களை ஈட்டிக் கொள்ளும் நோக்கிலும் உயர் விளையாட்டுக் கட்டடத்தொகுதியொன்றை நுவரெலிய பிரதேசத்தில் தாபிக்கும் பொருட்டு விளையாட்டுத்துறை அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உரிய ஒப்பந்தக்காரருடன் உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு 2016 திசெம்பர் மாதம் 20 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட கூட்டத்தில் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான கடன் வசதிகளை ஏற்பாடு செய்து கொள்வதற்காக உரிய நிறுவனத்துடன் கடன் இணக்கப் பேச்சுக்களை நடாத்துவதற்கும் கடன் வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு உரிய நிறுவனத்துடன் கடன் உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.