• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் முதலீட்டுப் போக்கினை மேம்படுத்தும் பொருட்டு மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துதல்
- இலங்கையுடன் சமநிலையிலிருந்த ஏனைய நாடுகள் தங்களுடைய நாடுகளில் முதலீடுகளை உயர் மட்டத்திற்குக் கொண்டுவரும் பொருட்டு முதலீடு செய்வதற்குரியதாக மேற்கொண்ட பல்வேறுபட்ட மறுசீரமைப்புகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, நாட்டிற்குள் முதலீடுகள் கூடுதலாக வருவதனை மேம்படுத்துவதற்கான மறுசீரமைப்புகள் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளன. இதன்மூலம் முதலீடுகள் சம்பந்தமாக இலங்கையில் போட்டிகரமான நிலையை உயர்மட்டத்திற்குக் கொண்டு வருவதற்கு இயலுமாகும். இதன் பொருட்டு பல்வேறுபட்ட வரிசை அமைச்சுக்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புத் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் பொருட்டும் விரிவான செயற்பாட்டுத் திட்டத்துடன் உரிய நோக்கங்களுக்கு பொறுப்பும் தலைமைத்துவமும் கையளிக்கப்படும் விதத்தில் பொருத்தமான வழிமுறையொன்றைத் தாபிப்பதற்கு இயலுமாகும் வகையில் ஏற்ற மறுசீரமைப்புகளை அறிமுகப்படுத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த நோக்கத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட குழுவொன்றுட னான செயலகமொன்றை திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சில் தாபிப்பதற்கும் உரிய நிறுவனங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பினை உருவாக்கும் பொருட்டு 10 தொழினுட்ப செயலணிகளைத் தாபிப்பதற்கும் உத்தேச சட்ட மறுசீரமைப்புக்குத் தேவையான சட்டங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.