• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகளை, பொது நோக்கங்களுக்காக உடைமையாக்குதல்
- காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான பின்வரும் காணித் துண்டுகளை பொது நோக்கங்களுக்காக பயன்படுத்தும் பொருட்டு உடைமையாக்குவதற்காக காணி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* சனசமூக நிலையமொன்றை நிருமாணிப்பதற்காக கடுவெல கொரத்தொட்ட பிரதேசத்திலுள்ள 7.31 பேர்ச்சஸ் விஸ்தீரணம் கொண்ட காணித்துண்டை கடுவெல மாநகர சபைக்கும்.

* கூட்டுறவு வங்கிக் கட்டடமொன்றை நிருமாணிப்பதற்காக சிலாபம் பிரதேசத்திலுள்ள 05 பேர்ச்சஸ் விஸ்தீரணம் கொண்ட காணித்துண்டை வரையறுக்கப்பட்ட சிலாபம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கும்.