• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரிய மன்னார் நீர்வழங்கல் திட்டம் தொடர்பிலான சாத்திய தகவாய்வொன்றை மேற்கொள்தல்
- மன்னார் மாவட்டத்தின் மக்களின் பிரதான பிரச்சினையொன்றாக மாறியுள்ள குடிநீர் வழங்கலில் உள்ள சிரமத்தினை குறைக்கும் குறிக்கோளுடன் பாரிய மன்னார் நீர்வழங்கல் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரிப்பொன்று செய்யப் பட்டுள்ளது. மன்னார் பிரதேசத்தின் எதிர்கால நீர்வழங்கல் தேவைகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் சில நீர்வழங்கல் கருத்திட்டங்களின் மூலம் நீர்வளங்களை விநியோகிக்கும் போது திடீரென எழும் பிரச்சினைகள் குறித்து நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சருடன் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்கு இணங்க, சாத்திய தகவாய்வொன்றை மேற்கொள்வதற்கும் மற்றும் பிரேரிப்பினை செய்திருந்த நிறுவனத்தின் செலவில் அவ்வாய்வினை நடாத்துவதற்கும் மற்றும் இக்கருத்திட்டத்தின் அமுலாக்கத்திற்காக Swiss Challenge பெறுகை நடைமுறையை பின்பற்றுவதற்குமென நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.