• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாத்தறை - கதிர்காம புகையிரத தண்டவாள விஸ்தரிப்பு கருத்திட்டத்தின் கீழ் மாத்தறை - பெலியத்தை பிரிவில் சமிக்ஞை, தொலைத்தொடர்பாடல் மற்றும் புகையிரத - வீதிக் கடவை பாதுகாப்பு முறைமையைத் தாபித்தல்
- மாத்தறை - கதிர்காம புகையிரத தண்டவாள விஸ்தரிப்பு கருத்திட்டத்தில் விடப்பட்டுள்ள எஞ்சிய ஏற்பாட்டினைப் பயன்படுத்தி மாத்தறையிலிருந்து பெலியத்தை வரையான வீதிப் பிரிவின் சமிக்ஞை, தொலைத்தொடர்பாடல் மற்றும் புகையிரத - வீதிக் கடவை பாதுகாப்பு முறைமையைத் தாபிப்பதற்கான ஒப்பந்தத்தை இக்கருத்திட்டத்தின் தற்போதைய ஒப்பந்தக்காரரான M/s China National Machinery Import and Export Corporation நிறுவனத்திற்கு கையளிப்பதற்கு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய ஒப்பந்தத்தை கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.