• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய கேள்வியின் மீதான வலுசக்தி முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் குறைவான மின்சார பாவனையுடன் வீடுகளுக்கு Light Emitting Diode Lamps (LED) ஏற்பாடு செய்தல்
- மின்சாரப் பாவனைக்கான கேள்வியினை குறைப்பதன் ஊடாக வலுசக்தி முகாமைத்துவத்தின் மீது பெரும் கவனத்தினை அரசாங்கம் செலுத்தியுள்ளதுடன் சலுகை கடன் திட்டத்தில் குறைவான மின்சாரப் பாவனையுடன், நுகர்வோர்களுக்கிடையில் வலுசக்தி வினைத்திறனை பிரபல்யப்படுத்துவதை நோக்கிய நடவடிக்கையொன்றாக, LED மின்விளக்குகளை அவர்களுக்கிடையில் விநியோகிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, வீடுகளில் பாவிக்கப்படும் உயர் மின்சாரப் பாவனை கொண்ட மின்விளக்குகளை அகற்றுவதற்கும், குறைந்த மின்சாரப் பாவனை கொண்ட LED மின்விளக்குகளின் மூலம் அவற்றைப் பதிலீடு செய்வதற்கும், மற்றும் மாதாந்த மின்சாரப் பட்டியலுடன் சேர்த்து, எதுவித வட்டியுமில்லாமல் 24 மாதங்களுக்குள் மாதாந்த சம தவணைக் கட்டணங்களில் வாடிக்கையாளர்களிடமிருந்து செலவினை மீளப் பெற்றுக் கொள்வதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. ஆதலால், இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், மாதமொன்றுக்கு 1 தொடக்கம் 30 இற்கு இடைப்பட்ட அலகுகளைப் பாவிக்கும் வீடொன்றுக்கு 02 LED மின்விளக்குகளையும், 30 தொடக்கம் 60 இற்கு இடைப்பட்ட அலகுகளைப் பாவிக்கும் வீடொன்றுக்கு 03 LED மின்விளக்குகளையும், 60 தொடக்கம் 90 இற்கு இடைப்பட்ட அலகுகளைப் பாவிக்கும் வீடொன்றுக்கு 04 LED மின்விளக்குகளையும் வழங்கும் பொருட்டும் அந்நோக்கத்திற்குத் தேவையான 1 மில்லியன் LED மின்விளக்குகளை சருவதேச போட்டி விலைமனுவுக்கு ஊடாக கொள்வனவு செய்யும் பொருட்டும் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.