• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பத்தரமுல்லையை சூழ்ந்த பிரதேசங்களிலுள்ள அரசாங்க அலுவலகங்களில் நெகிழ்வு நேரத்தினை நடைமுறைப்படுத்தல் பற்றிய முன்னோடிக் கருத்திட்டம்
- 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து 2017 ஆம் ஆண்டு சனவரி மாதம் வரையிலான மூன்று (03) மாத காலப்பகுதிக்குள் பத்தரமுல்லை நிருவாக பிரதேசத்தில் அரசாங்க அலுவலகங்களை அடைந்த வாகனங்களின் எண்ணிக்கையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றுக்கு இணங்க, தமது தனிப்பட்ட வாகனங்களை அல்லது உத்தியோகபூர்வ வாகனங்களை பாவிக்கும் 58 சதவீதமான உத்தியோகத்தர்கள் மு.ப. 7.00 மணியிலிருந்து மு.ப.9.30 மணிவரை தமது அலுவலகங்களை அடைவதற்கும் தமது கடமைநேரம் முடிந்ததன் பின்னர் பி.ப..3.00 மணியிலிருந்து பி.ப.5.30 மணிவரை தமது அலுவலகங்களை விட்டுப் புறப்படுவதற்கும் அத்தகைய வாகனங்களைப் பயன்படுத்துகின்றனரென்பது வௌிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, பத்தரமுல்லையை சூழ்ந்த பிரதேசங்களில் அமைந்துள்ள அலுவலகங்களில், மு.ப.7.30 மணிக்கும் மு.ப.9.15 மணிக்கும் இடையில் எந்நேரத்திலும் வேலைக்கு அறிக்கையிடுவதற்கும், குறித்த கடமை நேரம் முடிவுற்றதன் பின்னர் பி.ப.3.15 மணிக்கும் பி.ப.5.00 மணிக்கும் இடையில் எந்த நேரத்திலும் அவ்வலுவலகங்களை விட்டு புறப்படுவதற்கும் ஏதுவாக, நெகிழ்வு பணி நேரத்துடன்கூடிய முன்னோடிக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல் சார்பில், அது குறித்த பொது நிருவாக சுற்றறிக்கையொன்றை வௌியிடுவதற்கென பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளருக்கு அதிகாரமளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.