• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 ஆம் நிதியாண்டின் 1 ஆவது காலாண்டின் முடிவில் உண்மைச் செலவினம் பற்றிய அறிக்கை
- 2017 ஆம் நிதியாண்டின் 1 ஆவது காலாண்டுக்குரியதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட செலவின அறிக்கைக்கு இணங்க, 2017 ஆம் நிதியாண்டின் 1 ஆவது காலாண்டின் முடிவில் மீண்டுவரும் செலவினமாக 482,856 மில்லியன் ரூபாவையும் மூலதனச் செலவினமாக 474,509 மில்லியன் ரூபாவையும் உள்ளடக்கி, 957,365 மில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்தச் செலவினமொன்று அரசாங்கத்தினால் உறப்பட்டுள்ளதென்பது அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதற்கிணங்க, 2017 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புக்கிணங்க, 2017 ஆம் ஆண்டின் 1 ஆவது காலாண்டுக்குரியதாக தயாரிக்கப்பட்ட அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.