• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான உத்தேச விமான சேவைகள் உடன்படிக்கை
- பெருமளவு இலங்கை குடிமக்களுக்கான உறைவிடமாக கனடா உள்ளதுடன் தற்போது இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் விமான சேவை உடன்படிக்கை எதுவுமில்லை. ஆதலால், இரு நாடுகளுக்கிடையேயும் விமான சேவைகளை ஒழுங்குறுத்தும் நோக்குடன் வியாபாரம் மற்றும் சுற்றுலாத்துறை கைத்தொழிலை மேம்படுத்துவதற்கான வசதிகளை வழங்கி உத்தியோகபூர்வ மட்டத்தில் தற்போது முதலொப்பமிடப்பட்ட உத்தேச விமான சேவைகள் உடன்படிக்கையை கைச்சாத்திடும் பொருட்டும் அதன் பின்னர் அவ் உடன்படிக்கையின் பயனுறுதிவாய்ந்த அமுலாக்கம் கருதி பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டும் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.