• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-05-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றுலா கைத்தொழில்துறை மேம்பாட்டுக்காக காணிகளை வழங்குதல்
- அரசாங்கத்தின் இலக்கானது 2020 ஆம் ஆண்டளவில் இலங்கையில் 4.5 மில்லியன் சுற்றுலா பிரயாணிகளின் வருகை இலக்கை அடைந்து கொள்வதேயாகும். இது குறித்து, பிராந்திய மட்டத்திலான சுற்றுலா அமைவிடமொன்றை அபிவிருத்தி செய்து கொள்வதும் இதனுடன் தொடர்புபட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் மிக முக்கியமானதாகும். பல்வகைப்பட்ட சுற்றுலா கவர்ச்சியூட்டல் பிரதேசங்களுடன் சேர்ந்த தனிச்சிறப்பான உயிர்ச்சூழல் தொகுதியொன்றுடனும் பல்வகைத் தன்மைகொண்ட கடல்சார் வளங்களுடன் ஒருங்கமைந்த மனதைக் கொள்ளைகொள்ளும் கடல் முகப்பு ஒன்றுடனும் சேர்ந்து அமையப்பெற்ற கல்பிட்டிய பிரதேசமானது உள்ளூர் அதேபோன்று வௌிநாட்டு சுற்றுலா பிரயாணிகளுக்கிடையில் பிரசித்தமாகியுள்ளதுடன் இப்பிரதேசமானது சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கான பெருமளவு சாத்தியப்பாட்டையும் கொண்டுள்ளது. எவ்வாறாயினும், இந்தப் பிரதேசத்திலுள்ள விடுதிகள் மற்றும் ஏனைய சுற்றுலாசார் வசதிகளானவை உயர்தர சுற்றுலா பிரயாணிகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இல்லாதிருக்கின்றன. ஆதலால், சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்ட செயற்பாடுகள் மற்றும் வசதிகளின் அபிவிருத்தி கருதி கல்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள 56.35 ஹெக்டெயர் இயலளவு கொண்ட காணி ஒன்றுடன்கூடிய 05 காணித் துண்டுகளை இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்தளிக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.